ஏழு சிறைக்கைதிகள்

ஏழு ஆண்டுகளாக தீவிரம் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் ஹமோனியாவிலுள்ள 'நாஸ்திகர்கள்எல்லோரையும் இஸ்லாத்தைப் பின்பற்றும்படி வாதித்து வழிப்படுத்த முயன்றனர். மதம்மாறாத கிறிஸ்தவர்கள் சிறையில் கொடுமை யான இருளில் சிக்கிக்கொண்டனர்.

'முகம்மதுவே மிகப்பெரிய தீர்க்கதரிசிஇதனை கிறிஸ்தவர்களுக்கு விளக்கிக் கூற அவர்கள் முயற்சிசெய்தனர். 'அவர் கிறிஸ்துவைவிட மிக அண்மைக்காலத்தில் வாழ்ந்ததுடன் அவரே கடைசியான அல்லாவின் தீர்க்கதரிசி.

கிறிஸ்தவர்கள் கவனமாக செவிமடுத்து பதிலளித்தனர், 'உங்கள் சொந்த சட்ட முறையில் ஒரு விடயத்தை சட்டபுர்வமாக்கல் எண்ணிக்கையான சாட்சிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. இயேசுக் கிறிஸ்துவின் வருகைக்காக மோசேயிலிருந்து யோவான்ஸ்நானகன் வரை சாட்சிகள் உள்ளன. முகம்மதுவும்கூட அவரைப்பற்றி அவரே சாட்சி கூறினார்.” இதன்பின்பு முஸ்லிம் மதகுருக்கள் குழப்பிடித்து ஒரு வித்தியாசமான தாக்குதலைக் கொடுத்தனர்.

'நிச்சயமாக இஸ்லாம் தான் கடவுளால் அதிகாரமளிக்கப்பட்ட சமயம். எங்கள் இளவரசர் கிறிஸ்தவர்களின் நிலப்பகுதியைவிட அதிபெரிய பகுதிக்குரியவர்.என அவர்கள் வெறுப்புண்டாக்கும் புன்முறுவல் செய்தனர். 'அது உண்மையாயிருந்தால்”, கிறிஸ்தவர்கள்  பதில் கூறினர், 'எகிப்து, கிறீஸ், மற்றும் ரோம் போன்ற இடங்களில் விக்கிரக ஆராதனைகள் உண்மை விசுவாசமாயிருக்கலாம், ஏனெனில் ஒரு முறை அவர்களின் ராஜாக்கள் ஒரு பெரிய ராஜ்யத்தைக் கொண்டிருந்தனர். 

ஒன்று மட்டும் வெளிப்படை என்னவெனில் உங்கள் வெற்றி, சக்தி மற்றும் செல்வம் உங்கள் விசுவாசத்தின் உண்மைத்துவத்தை நிரூபிக்க மாட்டாது. நாம் அறிவது என்னவெனில் ஆண்டவர் சிலவேளை கிறிஸ்தவர்களுக்கு வெற்றியைத் தருவார், சிலவேளை சித்திரவதைகளுக்கும் பாடுகளுக்கும் விட்டுவிடுவார்.

345ல் மத்திய கிழக்கு அம்மோhpயா நகருக்கு அருகிலுள்ள முஸ்லிம்கள் இறுதியில் இந்த கிறிஸ்தவர்களின் முஹம்மதுவைப் பின்பற்றச் செய்யும் முயற்சியைக் கைவிட்டனர். அதில் ஏழுபேருடைய தலைகள் சிரச்சேதம் செய்யப்பட்டு, அவர்களின் உடல்கள் யுப்பிராத்து நதியில் வீசப்பட்டன.


இயேசு நம்மை அவருக்கு சாட்சியாயிருக்கும்படி கட்டளையிட்டார், எல்லாவற்றிற்கும் விடைகளைக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒரு நம்பிக்கையற்றவனுக்கு நம்மால் கூறக்கூடிய அதி வல்லமையான மூன்று சொற்கள். 'அது எனக்கு தெரியாது.நிச்சயமாக உங்களிடம் பதிலுண்டு, அந்த பதிலிலும் கூட ஒரு நம்பிக்கையற்றவனுக்கான சந்தேகமும் கேள்விகளும் உண்டு. எப்படியாயினும் உங்கள் தகவல்கள் எப்போதும் பொய்யென நிரூபிப்பதே இஸ்லாம் கூறும் பதிலாயிருக்கும். நீங்கள் எப்போதாவது உங்களுக்குத் தெரியாது என சாட்சியளிக்கும் சந்தர்ப்பத்தில் 'விடைகளைச்சொல்லுங்கள். நீங்கள் அறிந்த காரியங்களையெல்லாம் விவாதிக்க முடியாது. உங்கள் சாட்சி இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் சொந்த அனுபவமும் அவர் உங்கள் வாழ்வில் செய்த காரியங்களுமாகும். இவை இலகுவில் மறக்க முடியாதவை. ஆகவே சரீரத்தை கொல்லுகிறவர்களுக்கு பயப்படாமல் நமது விசுவாசத்தில் நம்பிக்கையில் உறுதியாக இருந்தால் இறைவன் மறுமையில் நற்பலனைத் தருவார். ஆகவே தற்போதே நற்பலனளிக்கும் உங்கள் சாட்சிகளை பிறருடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.