நீ இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. - தௌபிஃக், (நைஜீரியா)

என்னுடைய பெயர் தௌபிஃக், நான் நைஜீரியாவில் வாழ்கிறேன். என்னுடைய தாயும் தந்தையும் முஸ்லிம்கள்.

நான் சிறுவனாக இருக்கும்படி என்னைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை என் பெற்றோர் ஒரு இஸ்லாமிய ஷேக்கினிடத்தில் ஒப்படைத்திருந்தனர். அவரிடமிருந்து குரானுடைய பெரும்பகுதியை மனப்பாடமாகக் கற்றுக்கொண்டேன். அதேவேளையில் பிசாசுகளுடன் தொடர்புகொள்ளவும் அவர் என்னைப் பயன்படுத்தினார். அவர் ஒரு மந்திரவாதியாக இருந்த காரணத்தினால் அவர் இப்படிச் செய்தார். 


அவர் எனக்கு ஒரு தாயத்தைக் கொடுத்திருந்தார். அது என்னைக் கட்டுப்படுத்தியிருந்தது. பிறகு, நான் என்னுடைய பள்ளிப் படிப்பை முடித்துக்கொண்டு, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தபோது, எனக்குச் சில கிறிஸ்தவ நண்பர்கள் கிடைத்தார்கள். நான் அவர்கள் மூலமாக இயேசுவின் நற்செய்தியைக் கேள்விப்பட்டேன். 

நான் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஒரு படத்தையும் பார்த்தேன். அதில் ஒரு பகுதி என்னை அதிகம் தொட்டது. அதில் கிறிஸ்து தன்னைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன். என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).

நான் கிறிஸ்துவைப் பின்பற்ற வேண்டும் என்று முடிவு செய்து, திருமுழுக்குப் பெற்றுக்கொண்டேன். ஆயினும் நான் அந்த தாயத்தை அணிந்துகொண்டுதான் இருந்தேன். ஒருவேளை அதை நான் கழற்றினால் ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என்று பயந்தேன். ஒரு நாள் நான் ஒரு திருச்சபை ஆராதனையில் கலந்துகொண்டேன். அதில் “தாயத்து அணிந்திருக்கும் கிறிஸ்தவர்கள்” என்பதைப் பற்றி அந்தப் போதகர் பிரசங்கித்தார். அந்தப் பிரசங்கத்தின் நடுவில் அவர் என்னைப் பார்த்து, “நீ இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய முடியாது. நீ கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினால் அந்தத் தாயத்தை எறிந்துபோடு” என்று அவர் கூறினார். அவருடைய விரல் நேரடியாக என்னைத்தான் காட்டியது. அப்போது நான் அந்தத் தாயத்தை அணிந்துகொண்டுதான் இருந்தேன். அந்தப் பிரசங்கம் என்னை உருவக் குத்தியது.

அடுத்த நாள் நான் கிறிஸ்துவிடம் பாவ மன்னிப்பைக் கேட்டுவிட்டு அந்தத் தாயத்தை அவிழ்த்து எறிந்து விட்டேன். இறுதியில் நான் அதிலிருந்து விடுவிக்கப்பட்டேன். ஆனால் எனக்கு எந்தத் தீமையும் நிகழ்ந்துவிடவில்லை! அதற்கு மாறாக கிறிஸ்து அன்றிலிருந்து என்னை அதிகமாக ஆசீர்வதித்தார். கிறிஸ்து என்னுடைய பாவங்களுக்காக மரித்த காரணத்தினால் அந்த தாயத்தின் வல்லமையை முறியடித்தார்.