உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள். - பாராக்கத்துல்லா (எகிப்து)

என்னுடைய பெயர் பாராக்கத்துல்லா, நான் எகிப்தைச் சேர்ந்தவன். நான் ஒரு அதிகாரியாகவும் முஸ்லிம் தலைவனாகவும் இருந்தேன். 

ஒரு நாளில் ஒரு துண்டுக் காகிதம் என்னுடைய கவனத்தைக் கவர்ந்தது. அதில் “ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று எழுதியிருந்தது. அதை நான் எடுத்து முழுவதும் வாசித்தேன். அதில் கிறிஸ்து பேசியிருந்தார். அவர் சொன்னது: உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்;.. (மத்தேயு 5:43-44). 


நற்செய்தியிலிருந்து வரும் இந்த வாசகம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒரு முஸ்லிமாக எனக்கு கிறிஸ்துவைப் பற்றி தெரியும். இறைவனுடைய கட்டளையை மாற்றுவதற்கு இவருக்கு உரிமை உண்டா? அதற்கான அதிகாரம் அவருக்கு உண்டா? இந்தக் கேள்விக்கு தெளிவான பதிலைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு, கெய்ரோவில் உள்ள அல்-அஸôர் பல்கலைக்கழகத்திலுள்ள மாலை வகுப்பில் சேர்ந்தேன். 

நான்கு வருடங்கள் இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பிற மதங்களைக் குறித்த பாடத்தை நான் படித்துப் பட்டம் பெற்றேன். இந்து மதம், புத்த மதம், கன்பூசிய மதம், யூத மதம், கிறிஸ்தவம் ஆகியவற்றையும் அவர்களுடைய வேத நூல்களையும் படித்தேன். நான் குரானை நன்கு படித்து அதை மற்ற வேத நூல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். இந்தப் படிப்பின் மூலமாக நான் கிறிஸ்தவனாகி விட்டேன்.

கிறிஸ்து இறைவனுடைய சட்டத்தை மாற்றுவதற்கு உரிமையுள்ளவர். ஏனெனில் அல்லாஹ்வைப் போல அவரும் மக்களுடைய கீழ்ப்படிதலைக் கோருவதற்கு அதிகாரம் படைத்தவர் என்று குரான் குறிப்பிடுகிறது (சுரா ஆல இம்ரான் 3:50; அஜ் ஜுக்ருஃப் 43:63). அப்போது நான் கற்றுக்கொண்ட காரியங்களை நான் முஸ்லிம்களுக்குச் சொல்லுகிறேன்.

நான் எழுதிய இந்த துண்டுப் பிரதியில் எவ்வாறு இப்ராஹீமின் மகன் விடுவிக்கப்பட்டார் என்பதைப் பற்றி வாசிப்பவைகள் அந்தப் படிப்பில் நான் கண்டுபிடித்தவைகளே. இவைதான் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து இறைவனுடைய மகன் என்ற விசுவாசத்திற்குள் என்னை நடத்தியது.

என்னுடைய இந்த புதிய விசுவாசத்திற்காக நானும் என்னுடைய குடும்பத்தாரும் அப்போதிருந்து உபத்திரவங்களைச் சந்தித்து வருகிறோம். ஆனால் இன்றுவரை கிறிஸ்துவுக்கு உண்மையுள்ளவனாக நான் நிலைத்திருக்கிறேன்.