இரத்தம் சிந்தப்படாமல் பாவப்பரிகாரமோ பாவமன்னிப்போ கிடைக்காது. (இம்ரான்,- யோர்தான்)

என்னுடைய பெயர் இம்ரான், நான் யோர்தான் நாட்டைச் சேர்ந்தவன். நான் ஒரு பக்தியுள்ள முஸ்லிமாக இருந்து பல இஸ்லாமிய பள்ளிகளுக்குச் சென்றிருக்கிறேன். இறுதியாக நான் கெய்ரோவிலுள்ள அல் அஸôர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாத்தைப் பயின்றேன். 


ஆபிரகாமுடைய மகன் ஆபிரகாமினால் கொலைசெய்யப்படுவதற்கு கொண்டு செல்லப்பட்டபோது மிகப்பெரிய பலியினால் அல்லாஹ் எவ்வாறு அவரை மீட்டார் என்பதையே நான் என்னுடைய இறுதி ஆய்வுக்கட்டுரையின் பொருளாகக் கொண்டேன் (சுரா அல் ஸஃப்ஃபாத் 37:99-111). அந்த குரானிய பகுதிகளுக்கான முஸ்லிம் விளக்கவுரைகள் பலவற்றை ஆய்வு செய்தேன். அவற்றில் எதுவுமே மீட்பைக் (ஃபைடா) குறித்த கேள்விக்கு திருப்திகரமான பதிலைத் தரவில்லை. 

தவ்ராத்தையும் அதற்கு யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொடுக்கும் விளக்கங்களைக் கேட்ட பிறகே, தவ்ராத்தில் பதிலாள் மரணத்தின் மூலமாக வரும் பாவப்பரிகாரத்தைப் பற்றி பேசப்பட்டிருப்பதையும் சிலுவையில் கிறிஸ்துவின் பதிலாள் மரணத்தின் மூலமாக மீட்பு என்று நற்செய்தியில் சொல்லப்பட்டிருப்பதையும் படித்த பிறகே. மீட்பைக் குறித்து எனக்குப் புரிய ஆரம்பித்தது. 

இரத்தம் சிந்தப்படாமல் பாவப்பரிகாரமோ பாவமன்னிப்போ கிடைக்காது என்பதை உணர்ந்து கொண்டேன். நான் வேதாகமத்திலிருந்து கண்டுகொண்ட காரியங்களை என்னுடைய ஆய்வுக்கட்டுரையில் சேர்த்துக்கொண்டேன். என்னுடைய நிலைப்பாட்டை நான் விளக்கியபோது என் உடன் படித்த இஸ்லாமிய மாணவர்களும் பேராசிரியர்களும் மிகுந்த கோபமடைந்து கிட்டத்தட்ட என்னை அடித்துத் துவைத்து விட்டதார்கள். ஆனால் நான் பிழைத்துக்கொண்டேன்.

மரணத்திற்கு ஏதுவாக காயப்பட்டிருந்த என்னைக் கிறிஸ்தவர்கள் கண்டு, நான் சுகம் பெறும்வரை என்னைக் கவனித்துக்கொண்டார்கள். இன்று என்னுடைய பாவங்களுக்காக மரித்து, என்னுடைய பாவங்களை மன்னிக்கும் கிறிஸ்துவின் மரணத்தை இன்று நான் விசுவாசிக்கிறேன். குரான் உண்மையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கு மேற்கண்ட விளக்கம் எனக்கு உதவிசெய்தது.

எனதருமை நண்பரே! கிறிஸ்துவின் மீட்பை நீங்கள் நம்பாவிட்டால் நீங்கள் தொலைந்து போவீர்கள்!