விசுவாசத்தின் வழி மன்னிப்பு! - ஆசிஸ் (பாக்கிஸ்தான்)

என்னுடைய பெயர் ஆசிஸ். நான் பாகிஸ்தானின் ஒரு முன்னாள் முஸ்லிமாக வாழ்கிறேன். 


2007-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி நான் என்னுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு வெள்ளை நிற கார் என்மீது பலமாய் மோதியது. நான் கீழே விழுந்து கிடந்தபோது, அந்தக் காரின் ஓட்டுநரும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தவரும் இறங்கி வந்து இருப்பு அடிப்பக்கமுள்ள சப்பாத்துகளால் என்னை மிதித்தார்கள். அவர்கள் என்னுடைய தலையிலோ, முகத்திலோ, உடலின் மேல்பகுதியிலோ மிதிக்கவில்லை. அவர்கள் என்னுடைய காலையும் முட்டியையும் மட்டுமே குறிபார்த்துத் தாக்கினார்கள். 

என்னுடைய கால்கள் உடைந்துவிட்டன என்று அவர்கள் உறுதிசெய்தபிறகு “அல்லாஹ் அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கத்திவிட்டு என்னை விட்டுச் சென்றார்கள். அவசர ஊர்தி குழு வந்து என்னை எடுத்துக்கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தது. ஏற்கனவே பல இஸ்லாமிய எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளைக் கடந்த காலங்களில் சமாளிக்க வேண்டியிருந்தது. இது எனக்கு ஒரு புதிய அனுபவமல்ல. முப்பது நிமிடங்களுக்குள்ளாக போலீஸ் அந்த “தீவிரவாதிகளான அன்பின் சகோதரர்களுடன்” என்னிடத்தில் வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தை நான் கிறிஸ்தவ விசுவாசத்தைக் குறித்து சாட்சி கூறுவதற்காகப் பயன்படுத்தும்படி பரிசுத்த ஆவியானவர் என்னை பலப்படுத்தி வழிநடத்தினார். 

அப்போது அவர்கள் எனக்கு அருகில் வந்து எந்த ஒரு வார்த்தையையும் பேசுவதற்கு முன்பாகவே நான் அவர்கள் என்னுடைய சகோதரர்கள் என்று அறிவித்தேன். நான் அவர்களை மன்னிப்பதாகவும் சொன்னேன். மேலும், “நான் உங்களுக்குப் பயந்ததால் இப்படிச் சொல்லவில்லை. இது என்னுடைய கிறிஸ்தவ விசுவாசத்தின் வழி. நான் உங்களை மன்னிக்கிறேன். உங்களை நேசிக்கிறேன். உங்களுக்காக விண்ணப்பிக்கிறேன். இதைத்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து எனக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறார்” என்று சொன்னேன்.

ஏப்ரல் 4-ம் தேதி என்னுடைய கால்களில் அறுவை சிகிட்சை செய்யப்பட்டது. 6-ம் தேதி நான் மருத்துவ மனையிலிருந்து வீடு திரும்பினேன். நான் இப்பொழுது முழுமையான சுகம் பெற்றிருக்கிறேன். கர்த்தராகிய இயேசு அவருக்கு சாட்சியிடும் தருணத்தை எனக்குக் கொடுத்ததற்காக நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.