என்னுடைய பெயர் உதுமான், என்னுடைய மனைவியின் பெயர் மொதீனா. நாங்கள் வங்கதேசத்தின் எல்லைகளுக்கு அருகான இந்தியாவின் வடக்கு மாநிலத்தில் வாழ்கிறோம்.
நாங்கள் இருவரும் முஸ்லிம்களாக இருந்தோம். நான் ஒரு மீனவன். அதோடு நானும் என்னுடைய மனைவியும் சேர்ந்து சிறிதளவு விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
ஒரு நாள் நானும் பதினாறு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மிகப்பெரிய புயல் காற்று வீசியது. நாங்கள் நடுக்கடலில், ஆபத்தில் சிக்கிக்கொண்டிருந்தோம்.
அப்போது அந்தப் படகில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் இருந்த காரணத்தினால், அவரவர் தங்கள் தெய்வங்களை நோக்கி வேண்டிக்கொண்டார்கள். அத்தருணத்தில் திருமதி. அன்வாரா சொல்லியிருந்த ஒரு நற்செய்தியுள்ள கதை எனக்கு நினைவுக்கு வந்தது. அது கிறிஸ்து புயலை அமைதியாக்குவதைப் பற்றிய கதையாகும்.
என்னுடன் இருந்தவர்களும் கிறிஸ்துவிடம் வேண்டிக்கொள்ள வேண்டும் என்று நான் அவர்களை உற்சாகப்படுத்தினேன். நாங்கள் அனைவரும் கிறிஸ்துவிடம் பிரார்த்தனை செய்தோம். புயல் அடங்கி அமைதியானது.
நான் வீடு திரும்பியபோது கடலில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை திருமதி. அன்வாராவிடம் எடுத்துக் சொன்னேன். அந்த ஆழத்தில் கிறிஸ்து எவ்வாறு என்னுடைய உயிரைக் காத்தார் என்று விளக்கினேன். என்னுடைய பாவங்களை அறிக்கை செய்து, திருச்சபைக்குச் சென்று திருமுழுக்குப் பெற்றுக்கொண்டேன்.
அதன் பிறகு கிறிஸ்துவிலுள்ள என்னுடைய விசுவாசத்திற்கு நான் சாட்சிபகர்ந்தேன். ஏற்கனவே இரகசியமாக கிறிஸ்துவைப் பின்பற்றி வந்த என்னுடைய மனைவி, நான் கிறிஸ்துவை அறிக்கையிட்டபோது, தைரியமாக முன்வந்து திருமுழுக்குப் பெற்றுக்கொண்டார்.
இன்று நாங்கள் ஒழுங்காக திருச்சபைக்குச் சென்று, புயலில் என்னைக் காத்த கிறிஸ்துவிலுள்ள விசுவாசத்திற்கு சாட்சிபகர்ந்து வருகிறேன்.