குரான் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

(அசாலி, பாக்கிஸ்தான்)

நான் வாலிபனாயிருக்கும்போது குரான் தவறற்றது என்று இஸ்லாமியப் போதகர்கள் எனக்குக் கற்பித்தார்கள். ஏனெனில் அது அல்லாஹ்வினால் முத்திரையிடப்பட்டது (மாசோஅம் – ma'soum) என்று அவர்கள் சொன்னார்கள்.

என்னுடைய பெயர் அசாலி, நான் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவன்.  என்னுடைய வகுப்பில் இருந்த இரண்டு கிறிஸ்தவ மாணவர்களைத் தவிர அனைவருமே இஸ்லாமியர்கள்தான். அந்த இரண்டு கிறிஸ்தவ மாணவர்களையும் இஸ்லாமிற்கு மாற்ற நான் விரும்பினேன்.



அதற்காக அவர்களுடைய வேதாகமத்தைவிட என்னுடைய குரான் அதிக பலம் வாய்ந்தது என்று அவர்களுக்குக் காண்பிக்க விரும்பினேன். அவர்கள் தங்கள் வேதாகமத்தைக் கொண்டுவந்து குரான் அதைவிடச் சிறந்தது என்று அனுபவித்து அறிய வேண்டும் என்று சவால்விட்டேன். அவர்கள் தங்கள் வேதாகமத்தைக் கொண்டுவந்தார்கள், நானும் என்னுடைய குரானைக் கொண்டு சென்றேன்.

குரான் அல்லாவினால் முத்திரையிடப்பட்டதால் அதை அழிக்க முடியாது என்ற நான் நம்பினேன். ஆகவே இரண்டு தரப்பினரும் தங்கள் புத்தகத்தை எரிக்க வேண்டும் என்று கூறினேன். எந்த புத்தகம் எரிகிறதோ அது பெலவீனமானது என்று நிரூபிக்கப்படும். அல்லா தீயிலிருந்து குரானைக் காப்பார் என்ற நம்பிக்கையில் நான் என்னுடைய குரானுக்குத் தீயிட்டேன். ஆனால் தீயிட்ட சில நிமிடங்களுக்குள்ளாக என்னுடைய குரான் முற்றிலும் எரிந்து சாம்பலாகிவிட்டது என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது என்னை முற்றிலும் பாதித்தது.

கிறிஸ்தவர்களுடைய வேதாகமமும் குரானைவிடச் சிறந்ததல்ல என்பதை நிரூபிப்பதற்காக நான் அதை எரிக்க முயன்றேன். நான் எவ்வளவோ முயற்சி செய்தபோதிலும் அந்நாளில் எந்த சூழ்நிலையிலும் அது எரியவில்லை. இந்த நிகழ்வு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதால் நான் மயங்கி விழுந்தேன்.

நான் மீண்டும் எழுந்தபோது வேதாகமத்தின் சத்தியத்தை விசுவாசித்தேன். பக்தியுள்ள இஸ்லாமியர்களாகிய என்னுடைய பெற்றோர் என்னுடைய விசுவாசத்தைக் கண்டு கலங்கினவர்களாக என்னை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள். அதன்பிறகு நான் பல துன்பங்களை அனுபவித்தாலும் என்னுடைய புதிய விசுவாசத்தில் உறுதியாயிருந்தேன்.

அதன் பிறகு நான் ஒரு வேதாகமக் கல்லூரிக்குச் சென்றேன். இன்று நான் என்னுடைய நாட்டிலுள்ள இஸ்லாமியர்களுக்கும், இன்டர்நெட் மூலமாக உலகமெங்கிலும் வேதாகமம் நம்பத்தகுந்தது என்றும் குரான் தவறுள்ளது என்றும் சாட்சியிட்டு வருகிறேன்.