மரணம் ஒரு முடிவல்ல. அதற்கூடாக நித்தியத்தை சுதந்தரிப்பேன்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கெய்ல் வில்லியம்ஸ் அவர்களின் நண்பருடன் சேர்த்து பலர் தாலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். நண்பரின் உடல் அடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கெய்ல் வில்லியம்ஸ் அவர்கள் சொன்ன காரியம் "இந்த கல்லறைகளை நாம் இப்போ பார்க்கிறோம். எனக்கு தெரியும் நான் மரித்தால், இங்கே (ஆப்கானிஸ்தானில்) நித்திரை அடைவேன் என்று" என்று தன்னுடன் ஊழியம் செய்யும் நண்பர்களிடம் சொன்னார். கிறிஸ்துவுக்காக மரிப்பதில் எவ்வளவு வைராக்கியம் பாருங்கள்.




கெய்ல் வில்லியம்ஸ் அவர்கள் ஜிம்பாவே நாட்டில் பிறந்தவர். சிறுவயதில் இங்கிலாந்து சென்று படித்த இவர் மீண்டும் தென் ஆப்ரிக்க தேசத்தில் கல்லூரி படிப்பை தொடர்ந்தார். படித்து முடித்து மீண்டும் இங்கிலாந்து தேசத்தில் ஊனமுற்ற, நலிந்த குழந்தைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்தினார். தேவன் அளித்த அநாதி தீர்மானத்தின் அடையாளமாக ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஏழை, ஊனமுற்ற, நலிந்த குழந்தைகளை பராமரிக்க தன்னை ஒப்புகொடுத்தார். இவர் மூலம் பல குடும்பங்கள் தேவனுக்குள் வந்தன. குழந்தைகள் நல்வழிப்படுத்தபட்டனர். ஆனால் இதை புரிந்து கொள்ளாத தாலிபன் இயக்க முஸ்லிம் தீவிரவாதிகள் இவர்கள் ஊழியத்தை சேர்ந்த பலரை கொன்று விட்டனர்.

வாழ்வதற்கே அச்சம். என்ன நடக்குமோ என்கிற பயம் எப்போதும். துப்பாகிகள் நடுவில் ஊழியம் என்றாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் கெய்ல் வில்லியம்ஸ் இதை பற்றி கவலை படாமல் தொடர்ந்து இயேசு கிறிஸ்துவை அறிவித்தார். இது கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்தது. இந்த வேலையில் இவர் நண்பர் ஒருவர் பலருடன் சேர்த்து உயிரோடு கொல்லப்பட்டார். இவரின் இறுதி அடக்க ஆராதனை காபுல் தலைநகரில் நடந்தது. அங்கிருந்த கெய்ல் வில்லியம்ஸ் அவர்கள் சொன்ன காரியம் "இந்த கல்லறைகளை நாம் இப்போ பார்க்கிறோம். எனக்கு தெரியும் நான் மரித்தால், இங்கே (ஆப்கானிஸ்தானில்) நித்திரை அடைவேன் என்று" என்று தன்னுடன் ஊழியம் செய்யும் நண்பர்களிடம் சொன்னார்.

அக்டோபர் 20, 2008 ம் வருடம் சில தாலிபான் தீவிரவாதிகளால் வில்லியம்ஸ் துப்பாகியால் சுட்டு படுகொலை செய்யபட்டார். தனக்கு மரணம் வரும் என்று தெரிந்திருந்தும் நம்பிக்கையுடன் அதை எதிர்கொண்டார். தான் மரித்த பின் உடலை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபுலில் அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆசைபட்டார். தன்னுடைய உடல் கோதுமை மணியாக அதே மண்ணில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதே இவர் ஆசை.

வாலிப வயதில் அனைவருக்கும் வாழ வேண்டும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருக்கும். தன்னுடைய பிள்ளை ஓர் மருத்துவராகவோ, தொழில் நுட்ப வல்லுனராகவோ, மேதையாகவோ, அதிகாரியாகவோ வரவேண்டும் என்று பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் இவருக்கோ உடைந்து போன பிஞ்சு உள்ளங்களுக்காக ஏங்கியது. நலிந்த இருதயத்தை தேடி போனது. இது வாழும் இடம் அல்ல, கொலைகளம் என்று தெரிந்த பின்பும் சிலுவையை சுமந்து நின்றது. இன்று சிரித்த முகத்தோடு மண்ணுக்குள் புதையுண்டது. எவ்வளவு வாலிபர்களுக்கு இப்படிப்பட்ட தைரியம் இருக்கிறது? எவ்வளவு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சிலுவையை சுமக்க ஒப்புகொடுக்கிரார்கள்?

34 வயதில் மறந்த இவரை நம்மில் பலருக்கு தெரியாவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் வாழும் குழந்தைகள், கிறிஸ்தவர்களாய் மாறிய முன்னாள் இஸ்லாமிய குடும்பங்கள் இவரை உயிருள்ளவரை மறக்காது. இவருடைய மரணத்தை பார்த்த இவரை போல் தேவ ஊழியத்தை செய்யும் பல கிறிஸ்தவ சிலுவைகள் இன்றும் சிரித்த முகத்துடன் ஊழியம் செய்து வருகின்றனர். தங்கள் சிரிப்பு எப்போ நிற்கும் என்றே தெரியாமல் தைரியமாக சுவிஷேசத்தை அறிவித்த வண்ணம் உள்ளனர். நீங்கள் இவர்களுக்காக ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் ஜெபிக்கலாமே?

வெளிப்படுத்தல் 2: 10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.