சிலுவையைச் சுமப்பேன். (பாக்கிஸ்தான் தோழிகள்)

'சிலுவையை சுமப்பேன் என்று நீங்கள் உறுதிகொண்டால் அது வாழ்நாள் முழுவதும் முற்களாகவும், மலைகளாகவும், பிரச்சனைகளாகவுமே இருக்கும்” என இளம் வாலிப பெண் சலீமா உறுதியுடன் கூறினாள். 

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கிறிஸ்தவளாக வாழும் சலீமா தனது ஈமானை, பாடசாலை தோழியான ரகீலாவுடன் பகிர்ந்து கொண்டாள், பின் நாட்களில் அவளும் ஈசாவை தனது சொந்த இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டாள்.


தோழி சலீமாவுடன் இணைந்து 'ஒரு முஸ்லிமை மதமாற்றியமை” தொடர்பாக இளம் பெண் சலீமா குற்றஞ்சாட்டப்பட்டாள். இது பாகிஸ்தான் சட்டப்படி மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும். 

விரைவில் சலீமாவும் அவளது கிறிஸ்தவ மத போதகரும் கைதுசெய்யப்பட்டனர், அவளது பெற்றோரும் பொலிசாரின் பல கேள்விகளுக்குட்பட்டு அடிக்கப்பட்டனர். தனது ஈமானை விட்டுக்கொடுக்காத இளம்பெண் சலீமா பொலிசாரின் பாதுகாப்பின் கீழ் இருந்தபோதிலும் அவர்களினால் துஷ்பிரயோகத்திற்குட்பட்டாள். எனினும் அவளது விசுவாசத்தை அழிக்க முடியவில்லை. சிறையிலிருந்து தான் கற்ற சில கிறிஸ்தவ பாடல்களை பாடிக் கொண்டிருப்பாள்.

ரகீலா அவளது வீட்டைவிட்டு வெளியேறினாள். ஆனாலும் தனது சொந்த இஸ்லாமிய குடும்பத்தினரால் அவள் வேட்டையாடப்பட்டாள். அவளது புதிய நம்பிக்கையை கைவிட்டுவிட்டு, திரும்பவும் முகமதுவிடம் திரும்பும் கடைசி வாய்ப்பு அவளுக்கு வழங்கப்பட்ட போதும், அதை ஏற்க அவள் மறுத்துவிட்டாள்.

தனது சொந்த குடும்பத்தினராலேயே ரகீலா 'குற்றவாளி” என தீர்ப்பிடப்பட்டு தூக்கிலிடப்பட்டாள். அதேவேளை சலீமா நீண்ட நீதிமன்ற விசாரணைகுட்படுத்தப்பட்டாள். ரகீலாவின் குடும்பத்தினர் தமது மகளின் மரணத்திற்கு அவளே காரணமென குற்றஞ்சாட்டினர்.

தீவிரவாத முஸ்லிம்களின் மரண அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானின் மற்றொரு பகுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தினால் வெளியேறினாள். இன்றும் அவள் இறைவனுக்கு தொண்டு செய்து வருகிறாள். 'மலைகள் எவ்வளவு பெரிதாயினும் பரவாயில்லை, அதை மேற்கொள்ள இயேசு உதவி செய்வார்” என்று அவள் உறுதிப்பட கூறுகிறாள்.

உண்மையென்னவெனில் ஒவ்வொரு விசுவாசிகளும் இறைவனுக்கு உகந்த பணியைச் செய்யும்படிக்கே அழைக்கப்பட்டுள்ளனர். இறைவன் மிகவும் மதிப்புக்குரியவன். எமது பணியானது நம்மைச் சுற்றியுள்ள சமயலறை மேசையில், பக்கத்துவீட்டாரின் கதவருகில், அலுவலகத்தில் அவரது சிறப்புக்களை எடுத்துரைப்பதாகும். 



எமது அழைப்பின் நோக்கம் இதயத்தில் எங்குள்ளதோ, அங்கே அதை நிறைவேற்றுவதில் சிந்தையை கொண்டிருக்கும். நாம் கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்துகொள்ள கடமைப்பட்டவர்கள். தமது விசுவாசத்தை தமது நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது ஒரு தனிப்பட்ட வீர சாதனையாகவே இருக்கும்.

சிலுவையில் ஈசா அல் மஸீஹ் (இயேசு கிறிஸ்து) கொடுத்த மீட்பை ஒருபோதும் நாம் மறக்கலாகாது. ஆகவே எமது நோக்கம் மனிதரை மீட்க வந்த கிறிஸ்துவின் நற்செய்தியை பகிர்ந்து கொண்டு அவர்களை கிறிஸ்துவுக்கூடாக நித்திய வாழ்வுக்குவழிநடத்துவதாகவே இருக்க வேண்டும். அவ்விதம் செயற்பட நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?